-
Notifications
You must be signed in to change notification settings - Fork 13
Home
வே. இளஞ்செழியன் edited this page Jul 13, 2014
·
3 revisions
சொல்திருத்தியை மேம்படுத்துவதற்கு இன்னும் பல பணிகளைச் செய்ய வேண்டியுள்ளது. அவற்றைக் கீழே கொடுத்துள்ளேன். ஆர்வமுள்ளோர் அவற்றை எடுத்துச் செய்யலாம்.
- எண்ணுப்பெயர்களை அகராதியில் சேர்த்தல். தற்போது "எழுபத்து", "தொல்லாயிரத்து", போன்ற சொற்கள் இல்லை.
- முக்கிய இடப்பெயர்களைச் சேர்த்தல். எ.கா. "சென்னை", "கோலாலம்பூர்", "புதுவை", இங்கிலாந்து".
- தொழிற்பெயர்களைச் சேர்த்தல். எ.கா. "படித்தல்", "உண்ணல்", "மகிழ்தல்".
- பன்மைப் பெயர்களைச் சேர்த்தல். எ.கா. "மாடுகள்", மாந்தர்கள்", "ஞானிகள்".
- முக்கிய உயர்திணைப் பெயர்களைச் சேர்த்தல். எ.கா. "ராமு", "ஜெயலலிதா", "குமுதா", "மணியன்".
- விடுபட்டுள்ள தொகைச் சொற்களைச் சேர்த்தல். இவற்றுள் வினைத்தொகை (எ.கா. "செய்தொழில்"), பண்புத்தொகை (எ.கா. "வெண்மதி", "செந்தாமரை"), உவமைத்தொகை (எ.கா. "தேன்மொழி", "பொன்மேனி"), உம்மைத்தொகை (எ.கா. "ஆடுமாடு", "காய்கறி"), போன்றவற்றோடு ஏனைய தொகை (எ.கா. "பச்சைக்கொடி", "யானைக்குட்டி", "பசும்பொன்", "அரும்பணி") சொற்களும் அடங்கும்.
- இரட்டைக் கிளிவிகளைச் சேர்த்தல். எ.கா. "சலசல", "தகதக".